Title : ஒப்பாரி ( A funeral Elegy ) ஊதுவத்தியும் பூவும் மணக்க....அத எடுன்னு இத எடுன்னு கூச்சலும்... காபி கொண்டானு தண்ணி கொண்டானு அதிகாரமும்... ! வாங்கேனும் சொல்லல ! போங்கனும் சொல்லல ! எங்கேன்னும் சொல்லல! எப்போன்னும் சொல்லல!... பந்தல எழுப்ப பந்திய போட.. நாள் பாக்க நேரம் பாக்க... அங்காளி பங்காளினு ஒரு கூட்டம்... தெரிஞ்ச கூட்டம் ;தெரியா கூட்டம்... தண்ணிக்கு ஒரு கூட்டம்; தனெக்கென்னன்னு ஒரு கூட்டம்...திக்கு திசை இல்லாம நான் கிடக்க... அடிச்சிக்கிட்டும் பிடிச்சிக்கிட்டும் இருந்தது எல்லாம் ஒன்னா கவனிக்க.... பேந்த பேந்த நான் முழிக்க... முன்னையும் பின்னையுமா கால் எடுத்து வெக்க... "அய்யோனு !!"ஒரு கதறலடி கலங்கியது கண்களடி !!பச்ச நரம்புகாரி அவ.... சுண்டி இழுக்கும் அழகு அவ... பிடிச்சு போன காரணத்தால கூட்டிகிட்டு போனானாம்... பெத்த மனம் புலம்பையில பித்து பிடிச்சு போனதாம் !!! கடத்த தெரிஞ்ச ராசாவுக்கு காயம் சற்றும் தெரியல.. காலம் கடந்து போனாலும் காயம் கடந்து போகுமா ! இன்னும் நெனச்சி...