என் அழகு குட்டி செல்லமே !!
மாலை வேலை, சிவப்பும் மஞ்சளும் இலா அவளின் இதழ்கள் போல் சிவந்த வானத்தை பார்த்தவாரு புல்லின்னங்கள் வீடு திரும்பயில், தன்னிலை மறந்து அவளின் நினைவில் கரையோரம் அமர, எனது சிந்தனைகள் அந்த அலைகளோடு அடித்து செல்ல... சிப்பிகள் சட்டென்று கரையில் கொட்டியது போல் ஓர் சிரிப்பொலி என் கவனத்தை கவர, தங்க நிற மேகங்கள் இடையே ஜொலிக்கும் ஒரு சிறு பவளம் போல் அங்கும் இங்கும் தன் சிறு பாதச்சுவட்டை பதியவைத்து, ஓடி ஓடி அலைகளை கட்டி அனைத்து, அதை பிடித்து, விழுந்து, மீண்டும் எழுந்து, முகம் முழுதும் சிரிப்பால் சிவந்து; தனக்கென்ற ஓர் கவலையில்லா உலகில் தத்தி தத்தி ஓடும் அந்த மலர் பாதங்களை முத்தமிட்டு செல்லும் அலைகள் இடையே.. கள்ளமில்லா கடந்து வந்த பருவத்தை நினைத்து மனம் ஏங்க கண்ணங்களின் ஓரம் சிறு துளி விழ, மனதின் காயங்கள் மாறியாய் பொழிய! அந்த கலங்கமில்லா சிரிப்பிளே கபடமற்ற பாதையை நினைவில் கொண்டு, கரையோரம் நடந்து செல்ல, கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கயில் என் பாதசுவட்டிற்கு அருகே சிறு கால் சுவடுகள் அங்கும் இங்கும் பதித்து விளையாடுவதை கண்டு கண்களில் துளி கண்ணீரும் முகத்தில்...