Title : மார்கழியே...!! . . . [ மார்கழி, இது ஒரு எளிய வாழ்க்கைமுறை பற்றிய கவிதை ஆகும் .... விவசாயினின் மகன் தலைவனாக.. உயர் குடி பெண் தலைவியாக அவ்விருவர் இடையே இருக்கும் சொல்லா காதலை கற்பனையாக எழுதப்பட்டது ] . . . மற்றொரு பதிவு.. Another little story ❣️by சென்னை தமிழச்சி கீர்த்தி திருநாவுக்கரசு . . . . மலைமுகடுகளாம் அவளின் புருவங்கள்... அதன் இடையே உதிக்கும் சூரியன், நான் அவளுக்கு இட கருதும் குங்குமம் .... என் காதலின் சின்னமாகும்... கருவானத்தை கொண்டு மையிட்ட அவள் கண்கள்...கவலைக்கும் கண்ணீருக்கும் இடையே அவை புரியும் சிறுப்போர்கள் ..... உதட்டின் புன்சிரிப்பும் பல சமயங்களில் பொய்சிரிப்பும்... பெண்ணே !! கடவுள் படைத்த ஓவியம் நீ ! என் மனதில் எழுந்த காவியம் நீ ! யாரும் அறியா வெண்பனி நீ ! யான் மட்டும் அறியும் அழகிய மார்கழி நீ !! என்னை கடந்த தென்றல் நீ ! என் மனதை பறித்து சென்ற சூறைக்காற்று நீ ! என் எண்ணங்களை மறக்கடித்த நோய் நீ...