Title: தேநீர் விடுதி ( Life of Middle class !!) இதோ என் காதல் கடிதத்தை இறுதியில் ஏற்று என்னை இருக்கி பற்றி கொண்டாய்.. அதே எட்டாம் மாடி என்ன, இம்முறை ஜன்னல்கள் ஏதும் இல்லை !!.... ம்ம்ம்ம்... புது நிதி ஆண்டிற்காண பட்ஜெட் தாக்குதல்... சேமிப்பு திட்டங்கள், கடன் தள்ளுபடிகள், தங்கத்தின் நிலைகள், இறுதியில் சுற்றுலா திட்டங்களும் அடக்கி... தேதி பத்திற்க்கே முழு நிலவிலிருந்து அரை நிலவாக மாறிய நிலைமையில் !! தாளம் போடும் EMI கள் இடையே அமாவாசையை நெருங்கக்கூடாது என்ற பதட்டத்தோடு 9-5 சதுரங்க ஆட்டம் தொடங்கிய நிலையில்.. அதோ என் iron செய்த சட்டையின் முதல் எதிரி வந்துவிட்டான்...மெட்ரோ !! அவ்வப்போது முதல் வகுப்பின் வழியே தெரியும் ஒளியில் சரியான ஸ்டேஷனில் இறங்கி வாழ்க்கையின் ஓட்டம் தொடங்கும்... ஆம்.. கருவில் தொடங்கியது அறுபதிலும் ஓயவில்லை!! பரவாயில்லை !!! அவ்வப்போது வரும் இடப்பெயர்ப்பு காலத்தை சமாளிக்க... காக்கை கூடுகளை தேடி அலையும் சிறு கூட்டு குருவிகளாய்... கனவில் மட்டும் கோட்டை கட்டும் நடுத்தர வர்கத்தினர் தான் நாங்கள் !!! பழகிப்போன ப...