Posts

Showing posts from 2019
Image
Title: தேநீர் விடுதி ( Life of Middle class !!) இதோ என் காதல் கடிதத்தை இறுதியில் ஏற்று என்னை இருக்கி பற்றி கொண்டாய்.. அதே எட்டாம் மாடி என்ன, இம்முறை ஜன்னல்கள் ஏதும்  இல்லை !!.... ம்ம்ம்ம்... புது  நிதி ஆண்டிற்காண பட்ஜெட் தாக்குதல்... சேமிப்பு திட்டங்கள்,  கடன் தள்ளுபடிகள்,  தங்கத்தின் நிலைகள், இறுதியில் சுற்றுலா திட்டங்களும் அடக்கி... தேதி பத்திற்க்கே முழு நிலவிலிருந்து அரை நிலவாக மாறிய நிலைமையில் !! தாளம் போடும் EMI கள் இடையே அமாவாசையை நெருங்கக்கூடாது என்ற பதட்டத்தோடு 9-5 சதுரங்க ஆட்டம்  தொடங்கிய நிலையில்.. அதோ என் iron செய்த சட்டையின் முதல் எதிரி வந்துவிட்டான்...மெட்ரோ !!  அவ்வப்போது முதல் வகுப்பின் வழியே தெரியும் ஒளியில் சரியான ஸ்டேஷனில் இறங்கி வாழ்க்கையின் ஓட்டம் தொடங்கும்... ஆம்..  கருவில் தொடங்கியது அறுபதிலும் ஓயவில்லை!! பரவாயில்லை !!! அவ்வப்போது வரும் இடப்பெயர்ப்பு காலத்தை சமாளிக்க... காக்கை கூடுகளை தேடி அலையும் சிறு கூட்டு குருவிகளாய்... கனவில் மட்டும் கோட்டை கட்டும் நடுத்தர வர்கத்தினர்  தான் நாங்கள் !!! பழகிப்போன ப...
Image
Title: மீ(ளும்)ளா !!. - The Phase of Life ! . . மற்றொரு பதிவு... Another little story by❣சென்னை தமிழச்சி கீர்த்தி திருநாவுக்கரசு . . . . . பகலில் நட்சத்திரம்  ஒளிதலும்... இருளில் கதிரவன் மறைதலும்... புள்ளினங்கள் கூடுகளை அடைதலும்... தென்றல்  தன்னை தழுவி செல்லுதலும்... காற்றின் திசை மாறுதலும்... அத்திசை நோக்கி மேகக்கூடங்கள் நகர்தலும்... சிவந்த வானம் கருநீலம் சூழ...கண்களின் கருநீரோடு விண்துளிகள் புணர... நீர்நிலையில் குமிழுகல் மூழ்குவதும்... நினைவலைகள் நீரில் கரைவதும்... அலைகள் அனைத்து செல்லுதலும்... ஆசைகளில் சிக்கி கொள்ளுதலும்... மாரி பொழிதலும் அணை உடைதலும்...உபரிநீர் வருதலும்  வரப்பை நிறைத்தலும்....ஆக... வருதலும், புணர்தலும், வீழ்தலும்,  எழுதலும்... இயற்கையின் விதியில்.. காமத்தில் காதல் ஒளிதலும்... காதலில் நட்பு  ஒளிதலும்.. நட்பில் ஊடல் புணர்தலும்... காதலன் காதலை மறைத்தலும்... காலம் அதை நினைத்தலும்... வாழ்வு அதை விடுத்தலும்...  விட்டு மீண்டு எழுதலும்... வீழ்த்தெழுந்த பச்சிளங்கீற்றாய் வேர்களை பதித்தலும்... விவேகம் கொண்டு நடத்தலும்...
Image
Title : சேற்றுப்பூக்கள்...!! . . மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி  திருநாவுக்கரசு  . .சிலர் புரியும் தவறின் விளைவாய்  குழந்தைகள் படும் இன்னல்களை  குறிப்பதே "சேற்றுப்பூக்கள்" .  .  . . . அந்த கண்கள் யாவும் ஏக்கங்கள் கொண்டு பார்ப்பது ஏனோ?  ஏன் இந்த இரக்கப்  பார்வை? அய்யோ பாவம் என்று கை நீட்டி வினைவது ஏனோ?  சிலர் அவமதித்து சலித்துக்கொள்வது ஏனோ?  நாங்கள் யாதேனும் வேற்றுலகத்தின் பிறப்பா இல்லையில் அரியவகை பொருட்காட்சி பொருளா ?  பலர் வந்து பார்த்து செல்ல?  சிலர் அழைத்து செல்ல? அவர்களை அழைத்து செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள்?  எங்களை காண வருபவர்கள் யார்?  புதிதுபுதிதாய் வார்த்தைகள் பேசக்கேட்டோம் "அம்மா, அப்பா " என்றெல்லாம்  அவற்றின் அர்த்தம் யாதென அறியோம் ! சிலர் எங்களை கண்டு புன்முறுவல் புரிவர்...  மேலும் சிலர் புண்ணியம் என்பார்கள்,  பாவம் என்று கருணை பார்வையும்  கொள்வார்கள்  !! காரணி அறியோம்...