Title: மீ(ளும்)ளா !!. - The Phase of Life ! . . மற்றொரு பதிவு... Another little story by❣சென்னை தமிழச்சி கீர்த்தி திருநாவுக்கரசு . . . . . பகலில் நட்சத்திரம் ஒளிதலும்... இருளில் கதிரவன் மறைதலும்... புள்ளினங்கள் கூடுகளை அடைதலும்... தென்றல் தன்னை தழுவி செல்லுதலும்... காற்றின் திசை மாறுதலும்... அத்திசை நோக்கி மேகக்கூடங்கள் நகர்தலும்... சிவந்த வானம் கருநீலம் சூழ...கண்களின் கருநீரோடு விண்துளிகள் புணர... நீர்நிலையில் குமிழுகல் மூழ்குவதும்... நினைவலைகள் நீரில் கரைவதும்... அலைகள் அனைத்து செல்லுதலும்... ஆசைகளில் சிக்கி கொள்ளுதலும்... மாரி பொழிதலும் அணை உடைதலும்...உபரிநீர் வருதலும் வரப்பை நிறைத்தலும்....ஆக... வருதலும், புணர்தலும், வீழ்தலும், எழுதலும்... இயற்கையின் விதியில்.. காமத்தில் காதல் ஒளிதலும்... காதலில் நட்பு ஒளிதலும்.. நட்பில் ஊடல் புணர்தலும்... காதலன் காதலை மறைத்தலும்... காலம் அதை நினைத்தலும்... வாழ்வு அதை விடுத்தலும்... விட்டு மீண்டு எழுதலும்... வீழ்த்தெழுந்த பச்சிளங்கீற்றாய் வேர்களை பதித்தலும்... விவேகம் கொண்டு நடத்தலும்...