Title : சேற்றுப்பூக்கள்...!! . . மற்றொரு பதிவு.. Another little story ❣️by சென்னை தமிழச்சி கீர்த்தி திருநாவுக்கரசு . .சிலர் புரியும் தவறின் விளைவாய் குழந்தைகள் படும் இன்னல்களை குறிப்பதே "சேற்றுப்பூக்கள்" . . . . . அந்த கண்கள் யாவும் ஏக்கங்கள் கொண்டு பார்ப்பது ஏனோ? ஏன் இந்த இரக்கப் பார்வை? அய்யோ பாவம் என்று கை நீட்டி வினைவது ஏனோ? சிலர் அவமதித்து சலித்துக்கொள்வது ஏனோ? நாங்கள் யாதேனும் வேற்றுலகத்தின் பிறப்பா இல்லையில் அரியவகை பொருட்காட்சி பொருளா ? பலர் வந்து பார்த்து செல்ல? சிலர் அழைத்து செல்ல? அவர்களை அழைத்து செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? எங்களை காண வருபவர்கள் யார்? புதிதுபுதிதாய் வார்த்தைகள் பேசக்கேட்டோம் "அம்மா, அப்பா " என்றெல்லாம் அவற்றின் அர்த்தம் யாதென அறியோம் ! சிலர் எங்களை கண்டு புன்முறுவல் புரிவர்... மேலும் சிலர் புண்ணியம் என்பார்கள், பாவம் என்று கருணை பார்வையும் கொள்வார்கள் !! காரணி அறியோம்...