Posts

Showing posts from December, 2020

பட்டம்

Image
  பட்டம் அதோ என் கவிதையின்  தலைவி அடிமேல் அடி எடுத்து அந்திமாலை பொழுதில் மட்டும் வருகின்ற நட்சத்திரம் போல் என்னை காண வந்துவிட்டால்... அவள் பால்மணி அணிந்தது முதல் பருவம் அடைந்து அருந்ததி கண்டவரை அவளை முழுதாய் அறிந்தவன் நான்... பல திங்கள் செல்ல...  இன்று தான் காண்கிறேன் என் நிலவின் ஒளியை நிலத்தில்... இளமாலை வெயில் என்மீது வீச... அவளை கண்ட நான் நாணத்தில் சிவக்க வண்ணப்பருக்கள் எங்களை சூழ... என்னை நோக்கி பார்க்கும் அந்த கண்களின் ஆழம் ஆயிரம் கதை சொல்லும் எங்கள் காதலை பற்றி... இன்றும்  நினைவுண்டு இருவருக்கும்  தூதனாய் அனுப்பி வைத்த அவளின் முதல் காதல் மடல் : பறக்கும் காகிதம் (காத்தாடி)... எங்கள் காதலின் ஏணியாய், சமயங்களில்  சிறு  சண்டையின் இடையில் சிக்கி தவிக்கும் நண்பனாய் எங்கள் பயணத்தில் அவனும் உண்டு (பட்டம்).... ஆயிரம் பட்டம்  கண்டுள்ளேன்....வானில் வட்டமிடும் சில, வந்த பாதை மறந்து போகும் சில, சிக்கி கொள்ளும் சில, தொலைந்து போகும் சில, மாய்த்து வீழும் சில... ஆனால் அவளின் அன்பின் மடல் போல் கண்டதில்லை இன்றும்...என் அன்பிற்கு உரியவளே... காலத்தின் ஓட்டத்தில்...