பட்டம்

 

பட்டம்


அதோ என் கவிதையின்  தலைவி அடிமேல் அடி எடுத்து அந்திமாலை பொழுதில் மட்டும் வருகின்ற நட்சத்திரம் போல் என்னை காண வந்துவிட்டால்...


அவள் பால்மணி அணிந்தது முதல் பருவம் அடைந்து அருந்ததி கண்டவரை அவளை முழுதாய் அறிந்தவன் நான்...


பல திங்கள் செல்ல...  இன்று தான் காண்கிறேன் என் நிலவின் ஒளியை நிலத்தில்...


இளமாலை வெயில் என்மீது வீச... அவளை கண்ட நான் நாணத்தில் சிவக்க வண்ணப்பருக்கள் எங்களை சூழ...


என்னை நோக்கி பார்க்கும் அந்த கண்களின் ஆழம் ஆயிரம் கதை சொல்லும் எங்கள் காதலை பற்றி...


இன்றும்  நினைவுண்டு இருவருக்கும்  தூதனாய் அனுப்பி வைத்த அவளின் முதல் காதல் மடல் : பறக்கும் காகிதம் (காத்தாடி)...


எங்கள் காதலின் ஏணியாய், சமயங்களில்  சிறு  சண்டையின் இடையில் சிக்கி தவிக்கும் நண்பனாய் எங்கள் பயணத்தில் அவனும் உண்டு (பட்டம்)....


ஆயிரம் பட்டம்  கண்டுள்ளேன்....வானில் வட்டமிடும் சில, வந்த பாதை மறந்து போகும் சில, சிக்கி கொள்ளும் சில, தொலைந்து போகும் சில, மாய்த்து வீழும் சில...


ஆனால் அவளின் அன்பின் மடல் போல் கண்டதில்லை இன்றும்...என் அன்பிற்கு உரியவளே... காலத்தின் ஓட்டத்தில் மறந்து விட்டாயா ?? இல்லை மறைத்து விட்டாயா??


அறியா வயதில் எட்ட இயலா உயரத்தில் பறக்கவும் விடுத்து...அதை கண்டு மகிழவும் செய்து...


பிடிக்க இயலும் என்று சுற்றி சுற்றி கலைத்து...என்னை அடைய இறக்கை  கொண்டும் வருவேன் என்று சொல்விட்டு..


இன்று எட்ட இயலவில்லை  என்று புகார் அளித்து  வீணாக சுற்றி திரிகிறாள்  என் பித்துசிறுக்கி...


அறியா காரணம் நம்  உறவை முறிக்க உன் நினைவாய்  நான்...என் நினைவாய் அவள் உள்ளங்கை வடு என்று கூற ...


அம்மா என்ற குரல் ஓங்க...மேக கூட்டங்களை விலக்கி பார்க்க..குட்டி பட்டம் பறந்தது என்னை நோக்கி...


-கீர்த்தி திருநாவுக்கரசு


விளக்கம் :

பெண்களின் வாழ்க்கை பயணத்தில் அவள் இலக்காக வானையும் (sky) அதை அடையும் பாதையாய் பட்டத்தையும் (Kite)  வான்னானது அவளின் இலக்கை நினைவூட்டும் வகையில் மேகக்கூட் டங்களிடம் வினவும் உரையாடல்...

Comments

Post a Comment

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!