வானவில் துளி🌈
மழை பழக்கம் தான், மழையோடு சேர்ந்து வரும் அதன் வாசம் பழக்கம் தான், கொஞ்சம் குளிர் காற்றும் பழக்கம் தான் எனக்கு, நீல துளிகள் நிலத்தில் விழுதல் இயல்பு தான், சிறு சிறு முத்துக்கலாய் இலையில் முத்தமிடல் இயல்பு தான், பின் வானில் கதிரவன் வருகை இயல்பு தான், அதுபோல தோன்றிய என் காதலும் இயல்பு தான் உன்மேல்.. இவ்வியல்புகள் இடையே புதிதாய் தோன்றும் இந்த நினைவலைகள் யாது? என கேள்விகள் பலகொண்டு, இயல்பில் இருந்து தவறிய அந்த நீர்த்துளி, தோன்றியது வானில் வானவில்லாய்... -கீர்த்தி திருநாவுக்கரசு