வானவில் துளி🌈


மழை பழக்கம் தான்,⁣

மழையோடு சேர்ந்து வரும்⁣

அதன் வாசம் பழக்கம் தான்,⁣

கொஞ்சம் குளிர் காற்றும்⁣

பழக்கம் தான் எனக்கு,⁣

நீல துளிகள் நிலத்தில் ⁣

விழுதல் இயல்பு தான்,⁣

சிறு சிறு முத்துக்கலாய் ⁣

இலையில் முத்தமிடல் ⁣

இயல்பு தான்,⁣

பின் வானில் ⁣

கதிரவன் வருகை ⁣

இயல்பு தான்,⁣

அதுபோல தோன்றிய ⁣

என் காதலும் இயல்பு தான் ⁣

உன்மேல்..⁣

இவ்வியல்புகள் இடையே⁣

புதிதாய் தோன்றும் இந்த ⁣

நினைவலைகள் யாது?⁣

என கேள்விகள் பலகொண்டு,⁣

இயல்பில் இருந்து தவறிய ⁣

அந்த நீர்த்துளி,⁣

தோன்றியது வானில் ⁣

வானவில்லாய்...⁣

-கீர்த்தி திருநாவுக்கரசு ⁣

Comments

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!