Swipe plzz ..1➡️2
மற்றொரு பதிவு.. Another little story ❣️by சென்னை தமிழச்சி கீர்த்தி
திருநாவுக்கரசு
Read and comment below 👇
ஒற்றை இராந்தல் விளக்கில் ஒட்டு துணி இல்லாமல் அவளை கண்டேன்... நிலவின் முகம்.. பிறை போன்ற நெற்றி..
அருவி விழுவதுபோல் காட்சியளிக்கும்
கருநீல கூந்தல்... தாமரை இதழ்.. இவையனைத்தும் கடந்து பளிச்சென்று பிரகாசிக்கும் நட்சத்திர கண்கள்.. இன்னால்வரை கண்டதில்லை அவளைபோல் ஒரு தாரகையை !! ஆனால் இன்றோ
கண்களில் ஈரம்.... ஏனோ தெரியவில்லை இன்று என் மனம் படும் அல்லலை... பலமுறை கண்டுள்ளேன்... இன்று இயலவில்லை அவள் கூறிய வார்த்தையால்... எப்படி வந்தே? எங்க பிறந்த?
எங்க இருந்த?
தாய் தகப்பன் உண்டோ.. உடன்பிறப்புகள்? பள்ளிக்கூடம் கண்டதுண்டோ ! தோழன் தோழியர்கள் அவ்வாரு யாரெனினும் உண்டோ?!
பகல் கண்டதுண்டோ?!பச்சை வயல் கண்டந்துண்டோ..?!
காதல் உணர்ந்ததுண்டோ...?! ஆசை வந்ததுண்டோ..?!
பிடிப்பு பிடிக்காதவை ஏதேனும் பட்டியல் உண்டோ..?! என்று கேள்விகளை அடுக்கி கொண்டு சென்றேன் ஐந்து வயது குழந்தை போல்.... ம்ம்ம்... ம்ம்ம்.. என்று ஊங்காரம் கொட்டி கொண்டிருந்தாள் அந்த பைங்கிளி !!!! ஒற்றை சொல்லில் நாணமடைய செய்தால் என்னை !!! தினமும் நான் தாரமாகிறேன் படுக்கையில் !!! ஒருமுறையாயினும் மனம் பார்க்கும் மன்னன் வேண்டும் !!! என்று எழுந்து சென்றால் வேசி மகள் !!!.... -கீர்த்தி திருநாவுக்கரசு
.
.
.
.
#Respect_every_women #Prosititute_life #Otherside_of_coin
#random_thoughts
#keep_supporting
https://heycrazyminnal.blogspot.com/?m=1


Fav one❤👌🏽👌🏽
ReplyDelete