மற்றொரு பதிவு.. Another little story ❣️by சென்னை தமிழச்சி கீர்த்தி
திருநாவுக்கரசு
Read and comment below 👇.
.
.
அடை மழைக்கு பிறகு மேகங்கள் விலகின... மெதுவாக...
அண்ணார்ந்து பார்த்தேன் அந்த அமைதியை...
அந்த உணர்வை....
மழைக்கு பின் இருந்த மண்ணின் மணத்தை நுகர்ந்தேன்...
இன்று எல்லாமே புதிது தான் !!
ஆம் ! இனி இந்த உலகம் எனக்கு புதுசுதான் !! மேலே காணும் வானமும் எனது நாணமும் புதிதுதான் !!
பளிச்சென்று பிரகாசிக்கும் கதிரும் அதின் ஒளியில் நானும் புதுசுதான் !!..
ஈரமண்ணுல என் கால் இட்ட கோலம் புதுசுதான் !!!
வீட்டுக்குள்ள ஓலை பின்னாடி ஒளிந்தது புதுசுதான் !!..
மஞ்சளின் மணம் புதுசுதான்.. மங்கையின் குணம் புதுசுதான் !!
காதில் கேட்கும் ஒலி புதிது... காதணியும் புதிது !! நீளமுடியும் புதிது.. பூக்களின் ஸ்பரிசமும் புதிது !!..
கிள்ளியாடிய நினைவும் உண்டு !! பல்லாங்குழிக்கு ஏங்கிய மனமும் உண்டு !!
அரை டிரௌசர் போட்டதும் உண்டு ! அம்மா சீலையை உடுத்தியதும் உண்டு !!
கபடி ஆடியதும் உண்டு ! கட்டாந்தரையில் கூட்டாஞ்சோறு பொங்கியதும் உண்டு !!
காதலும் உண்டு அதுக்கான மனமும் உண்டு !!!
மறைத்து வைத்த கண்மையும் உண்டு ! மறையா கருவளையங்களும் உண்டு !!
என் காணலும் புதிது !! இனி என் தேடலும் புதிது !!!
டப்.. டப் ... டப்... என தோழியர் கை தட்டும் தாளம் வெளியே ...
குங்கமத்தை இட்டு வெளியே வந்தாள்( ன் )..
வானவில் எழுந்தது !!
-கீர்த்தி திருநாவுக்கரசு
#love #Sec377 #transgender #todaysthought #Otherside_of_coin #peace #lgbtq🌈 #instawriting #innerfeelings

😍❤👌🏽
ReplyDelete