Title : மார்கழியே...!!
.
.
.
[ மார்கழி, இது ஒரு எளிய வாழ்க்கைமுறை பற்றிய கவிதை ஆகும்
.... விவசாயினின் மகன் தலைவனாக.. உயர் குடி பெண் தலைவியாக அவ்விருவர் இடையே இருக்கும் சொல்லா காதலை கற்பனையாக எழுதப்பட்டது ]
.
.
.
மற்றொரு பதிவு.. Another little story ❣️by சென்னை தமிழச்சி கீர்த்தி
திருநாவுக்கரசு
.
.
.
.
மலைமுகடுகளாம் அவளின் புருவங்கள்...
அதன் இடையே உதிக்கும் சூரியன், நான் அவளுக்கு இட கருதும் குங்குமம் .... என் காதலின் சின்னமாகும்...
கருவானத்தை கொண்டு மையிட்ட அவள் கண்கள்...கவலைக்கும் கண்ணீருக்கும் இடையே அவை புரியும் சிறுப்போர்கள் .....
உதட்டின் புன்சிரிப்பும் பல சமயங்களில் பொய்சிரிப்பும்...
பெண்ணே !! கடவுள் படைத்த ஓவியம் நீ !
என் மனதில் எழுந்த காவியம் நீ !
யாரும் அறியா வெண்பனி நீ !
யான் மட்டும் அறியும் அழகிய மார்கழி நீ !!
என்னை கடந்த தென்றல் நீ !
என் மனதை பறித்து சென்ற சூறைக்காற்று நீ !
என் எண்ணங்களை மறக்கடித்த நோய் நீ !
என் சிந்தனைகளை மூழ்கடித்த காட்டாறு நீ !
உனது வருகை என் இதயத்திற்கும் இதயக்குழாய்க்கும் நடக்கும் மூன்றாம் உலகப்போரடி ...
பிழைக்க வழியில்லாமல் சிக்கிக்கொண்ட நானும் !!!
உன் கால்கொலுசு சத்தத்திற்கு மெட்டிட்டு திரும்பும் என் கழுத்தும்..!!!
எத்திசை இருப்பின் உன் திசை நோக்கி பாயும் எனது இதய அம்புகளும் !! காலத்தின் ஆட்டமடி....இது
காதலின் விதியடி !!!
காலேஜ் கற்சுவற்றின் தலைவன் தலைவியாக நீயும் நானும் !!!
சிறிது என் நாணமும்...
சுயேட்சையாக இருந்த என்னை... உன் சுயமியில் வீழ்த்திய தெரிவையே !!!
காந்த பார்வையடி கந்தர்வ கன்னியடி...
கட்டியிழுத்து என்னை சிறைபிடித்தது ஏனடி !!
புரியாத புதிரே...
எதை நோக்கி செல்கிறாய்....
ஏன் இந்த வெறுமை.. ஏன் இந்த தனிமை...
தனித்துவம் காண்பிக்கிராயா ?? இல்லையேல் ... தனிமை கொள்கிறாயா ??....
என் வினாவாக நீ !.. உன் விடையாக நான் !!!
சுற்றம் ஏதும் கருதா முற்றிலும் உன்னை மூச்சுக்காற்றாய் மனதில் அடைத்து கொண்ட நான் !!
வா செல்வோம்....
வாழ்க்கை இரசிக்கவே !! வாழ்க்கை வாழ்வதற்க்கே என் கண்மணி !!
பூக்கள் மலர்வது ஒருமுறை..
பெண் பருவமடைவது ஒருமுறை...
முதல் காதல் ஒருமுறை..
முதல் முத்தம் ஒருமுறை..
பிறப்பு ஒருமுறை..
இறப்பு ஒருமுறை..
வாழ்வின் சூட்சமமடி...
இதனை ஏற்க மறுப்பது ஏனடி !!
சற்றே நிமிர்ந்து வானத்தை பார் ... பின் நம் நிலத்தின் வரப்பை பார்..
அதில் தெரியும் உன் பிம்பம் அந்த அரம்பையரையும் நாணம்கொள்ள செய்யும்....
பறக்கும் விமானம் தோற்று போகுமடி
மழைக்கு முன் வரும் என் தோட்டத் தட்டானை பார்த்து...
சொகுசு கப்பல்கள் எதற்கடி..
நம் கால்வாயின் காகிதம் கப்பல் இருப்பின்...
Candle லைட் டின்னர்களும் தோற்குமடி என் நிலாச்சோறு முன்னால் ...
புல்தரை இருப்பின் red carpet-கள் நமக்கெதற்கு...
மின்மினியின் ஒளியில் தெரியும் என் நிலவே !
spot light-கள் தேவை இல்லை உனக்கு....
ஆனால் இங்கே சிமிலிவிளக்கு மட்டுமுண்டு..
அயல் நாட்டு உணவுகளுக்கு வாய்ப்பில்லை...
அயிரை மீனுக்கு வாய்ப்புண்டு...
மஞ்சம் இல்லை ஆனால் என் மடியுண்டு...
குளிர்சாதனம் இல்லை ஆனால் புங்கை மரத்தின் காற்றுண்டு ....
பகட்டுக்கு இடமில்லை பயிருக்கு இடமுண்டு...
போதுமடி இந்த மௌனம்....
என் வல்லினத்தை தோற்க்கடித்த மெல்லினமே....
நமக்கென்ற விடியலை நோக்கி செல்வோம்
எளிமையான அடையாளம் கொண்டு...
என் மார்கழியே !!
-கீர்த்தி திருநாவுக்கரசு
.
.
பொருள் அறிக :-
1)அரம்பையர் - தேவ கன்னிகை
2) தெரிவை - பெண், 25 முதல் -30 வரை வயதிற்குட்பட்ட பெண்.

❤❤
ReplyDelete