என் அழகு குட்டி செல்லமே !!⁣⁣

 





மாலை வேலை,⁣⁣
சிவப்பும் மஞ்சளும் இலா⁣⁣
அவளின் இதழ்கள் போல் சிவந்த⁣
வானத்தை பார்த்தவாரு புல்லின்னங்கள் வீடு திரும்பயில், தன்னிலை மறந்து அவளின் நினைவில் கரையோரம் அமர,⁣⁣
எனது சிந்தனைகள் அந்த அலைகளோடு அடித்து செல்ல...⁣⁣
சிப்பிகள் சட்டென்று கரையில் கொட்டியது போல் ஓர் சிரிப்பொலி என் கவனத்தை கவர,⁣⁣
தங்க நிற மேகங்கள் இடையே⁣⁣
ஜொலிக்கும் ஒரு சிறு பவளம் போல்⁣⁣
அங்கும் இங்கும் தன் சிறு பாதச்சுவட்டை பதியவைத்து,⁣⁣
ஓடி ஓடி அலைகளை கட்டி அனைத்து, அதை பிடித்து, விழுந்து, மீண்டும் எழுந்து, முகம் முழுதும் சிரிப்பால் சிவந்து;⁣⁣
தனக்கென்ற ஓர் கவலையில்லா உலகில் தத்தி தத்தி ஓடும் அந்த மலர் பாதங்களை முத்தமிட்டு செல்லும் அலைகள் இடையே..⁣⁣
கள்ளமில்லா கடந்து வந்த பருவத்தை நினைத்து மனம் ஏங்க⁣⁣
கண்ணங்களின் ஓரம் சிறு துளி விழ,⁣⁣
மனதின் காயங்கள் மாறியாய் பொழிய!⁣⁣
அந்த கலங்கமில்லா சிரிப்பிளே  கபடமற்ற பாதையை நினைவில் கொண்டு,⁣⁣
கரையோரம் நடந்து செல்ல, கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கயில்⁣⁣
என் பாதசுவட்டிற்கு அருகே சிறு கால் சுவடுகள் அங்கும் இங்கும் பதித்து விளையாடுவதை கண்டு⁣⁣
கண்களில் துளி கண்ணீரும் முகத்தில் சிறு புன்னகையும் கொண்டு,⁣⁣
வீடு திரும்புகிறேன்....⁣⁣
என் அழகு குட்டி செல்லமே !!⁣⁣


⁣⁣-கீர்த்தி திருநாவுக்கரசு

Comments

  1. அவ்வளவு அழகாக அருமையாக அமைந்துள்ளது கவி.... கதைகளுக்கு காத்திருக்கும் நான்....என்று வரப்போகிறது? ஆர்வம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!