ஆயிரம் முறை உன் கருமையை கண்டுள்ளேன்.... சலிக்காமல்...பலமுறை உன்னில் தொலைந்தும் உள்ளேன்...வழி தேடி அலைந்தும் உள்ளேன்... எனினும் அறியா நேரத்தில் என்னுள் வந்தது ஏனோ !!
வெறுமையை கொண்டவன் நீ, என்று பலர் கூறினும் அதில் வண்ணங்களை பார்த்தவள் நான் !!
உன் தனிமையை கருநிறம் கொண்டு நீ மறைத்த போதும் அதில் நட்சத்திரங்களை ஒட்ட வைத்து அழகு பார்த்தவள் நான்...
உனக்கென்ற வட்டத்தை இந்த சமூகம் போட்ட போதிலும் உன் அருகில் வர தயக்கம் இல்லாதவள் நான்...
உன் தனிமையை கருநீல மேகங்களை கொண்டு நீ மறைத்த போதும் மாரியாய் பொழிந்து போக்கியவள் நான்....
கருமையின் ஒளியில் நீ ஒளிந்திருந்தும்... உன்னை காண நினைக்கும் ஒளி நான்....
கட்டி அணைத்துக்கொண்டாள் கரி பட்டுவிடுமோ என்று தயக்கம் இல்லாதவள் நான்...
உன் மணத்தை விரும்புபவள் நான்... உன்னை மணமுடிக்க கருதுபவளும் நான்... நம் மண்ணின் நிறமல்லோ நீ !!
என் கருவிழி கருப்பு.. என் கருநீல கூந்தல் கருப்பு... இரவின் நிறமும் கருப்பு...அந்த கற்பக்கிரஹ இறையின் நிறமும் கருப்பு....
என் தாயின் கருவரையில் நான் பார்த்த முதல் நிறமும் கருநிறம் தானடா !!
பார்த்து இரசித்த உன்னை சட்டென்று நீங்க சொல்ல காரணம்...
உனது கருமையினாலா அல்ல இந்த சமூகம் இட்ட வெண்ணிற கோட்டாளோ ???..
போதுமடா இந்த சாதியும் மதமும்.. உன்னை அறிய உன் பெயர் இருப்பின்... தொழிற் பெயர் எதற்கடா பதரே !!
கருமையில் மூழ்கி இருப்பது நீயல்லவே இந்த சமூகம் தானடா !!
எழுவோம் மனிதனாய்... பாகுபாடு இல்லா குழந்தையாய்...
என் கருநிலவே வா...
காதல் காட்டும் பாதையில்.......
-கீர்த்தி திருநாவுக்கரசு
குறிப்பு : காதல் உலகத்தின் மொழி...
இதில் "கருமை" என்று நான் குறிப்பிடுவது நிறம் அல்ல சாதி இன வேறுபாட்டை குறிப்பதாகும் !! "வெள்ளை கோடு" என்பது உயர்குடி என்று தன்னை கருதும் இனத்தை குறிக்கும் சொல். காதல் குழந்தையை போல, அதை சாதி மதமின்றி வளர்ப்போம்...

Awesome 👌👌👌👌
ReplyDeleteTq😍😍
DeleteNice
ReplyDelete❤️❤️❣️
Delete😍😘😍
ReplyDeleteNanri nanba😍😍
DeletePpaahh
ReplyDeleteEeee😬😬
DeleteLoved it💞
ReplyDeleteTnks❤️
DeleteLoved it💞
ReplyDelete❣️❣️😍
DeleteLovely minnal ❤️😘
ReplyDeleteTq so much ❤️❤️😍
DeleteSemma wonderful words this message will change the people who r thinking about cast
ReplyDeleteTq so much !!!
DeleteAwesome keerthi...keep posting and keep rocking...
ReplyDeleteSure tq for Ur support!!!
Delete❤❤👌🏽
ReplyDelete