Title : ஒப்பாரி  ( A  funeral  Elegy  )


ஊதுவத்தியும் பூவும் மணக்க....அத எடுன்னு  இத  எடுன்னு கூச்சலும்... காபி கொண்டானு  தண்ணி கொண்டானு  அதிகாரமும்... ! வாங்கேனும்  சொல்லல ! போங்கனும் சொல்லல ! எங்கேன்னும்  சொல்லல! எப்போன்னும்  சொல்லல!...
பந்தல எழுப்ப பந்திய  போட.. நாள் பாக்க  நேரம் பாக்க...
அங்காளி பங்காளினு ஒரு கூட்டம்... தெரிஞ்ச கூட்டம் ;தெரியா கூட்டம்... தண்ணிக்கு ஒரு கூட்டம்; தனெக்கென்னன்னு ஒரு கூட்டம்...திக்கு திசை இல்லாம நான்  கிடக்க...  அடிச்சிக்கிட்டும் பிடிச்சிக்கிட்டும் இருந்தது எல்லாம் ஒன்னா கவனிக்க....
பேந்த பேந்த நான் முழிக்க...
முன்னையும் பின்னையுமா கால் எடுத்து வெக்க...
"அய்யோனு !!"ஒரு கதறலடி கலங்கியது கண்களடி !!பச்ச நரம்புகாரி அவ.... சுண்டி இழுக்கும் அழகு அவ... பிடிச்சு போன காரணத்தால கூட்டிகிட்டு  போனானாம்...
பெத்த மனம் புலம்பையில பித்து பிடிச்சு போனதாம்  !!!
கடத்த தெரிஞ்ச
ராசாவுக்கு காயம் சற்றும்  தெரியல..
காலம் கடந்து போனாலும் காயம் கடந்து போகுமா ! இன்னும் நெனச்சி பாக்கையிலே
புலம்புதடி பித்து மனம்...பாவிமகளே
ஏண்டி   இந்த அவசரம்  !!!
இனி யாரடி அதட்ட? யாரடி திட்ட?  யாரடி மிரட்ட?  யாரோடடி விளையாட? அய்யோ... தாலாட்டு பாடின என்னைய  ஒப்பாரி பாட வெச்சிட்டியே என ஏச !!
ஓடிவாடி தங்கமே!!பத்துமாத வலியெல்லாம் உன் பிஞ்சு முகம் பார்க்கையிலே பறந்தோடி போனதடி  !! ஈ கடிக்கா  எறும்பு கடிக்கா பாத்துக்கிட்டேனே !! பால் நிலா காட்டினேனே!!
இப்படி  பால் ஊத்த வெச்சிட்டியே  !!
அத பண்ணுவே இத பண்ணுவே சொன்னியே !!! வெயில கூட தாங்கமாட்டியே செல்லமே ... எப்படி நெருப்புக்கு கொடுக்குவே உன்னைய !! என் கண்னே  !!!
புரியாம நான் நிக்க தொடவும் முடியல தொட்டு அழவும் முடியல... என்னாச்சி ஏதாச்சி பாக்கையிலே  !!
பண்ணதெல்லாம் நெனச்சி பாக்க நேரமில்ல... !!! வேணாண்டி வீண் வம்பு...திரும்பி வாடி ராசாத்தி... மருதாணி செவந்த கையில இப்போ இரத்தம் செவந்து ஓடுதடி !!! உறுமி ஓலம்  கேட்கையிலே  !! தொப்புள்கொடி உறவ அறுத்து விட்டு போனாலே பாவி மக!!!

-கீர்த்தி  திருநாவுக்கரசு

----------------------------------------------------------------------------------------------------------------

ஒப்பாரி தமிழ் நாட்டுப் பாடல்  வகைகளில் ஒன்று.
எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது.

ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள்.

உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி  இசைக்கப்படும். இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

----------------------------------------------------------------------------------------------------------------

English ( message language )

Title : Oppari ( A funeral Elegy )

Oothuvathiyum poovum manakka ....Atha Edunnu itha edunnu koochalum ......kaapi kondanu thanni kondanu athigaramum... ! Vangaenum solala! ponganum solala! Enganum solala ! Eponum solala !...
Panthala ezhupa panthiya poda.. Naal paaka neram paaka... Angaali Pangaali nu oru kootam
... Therinja kootam Theriya kootam ;..Thanni ku oru kootam ; Thankenna nu oru kootam...Thikku Thisai ilaama nan kidaka ... Adichikittum Pidichikittum irunthathu ellam onna gavanika ....
Pentha pentha nan muzhika...
Munaiyum pinnayuma kaal eduthu vekka ...
" Ayoonu !!" Oru katharaladi kalangiyathu kangaladi !! Pacha narambukaari ava ....Sundi izhukum azahgu ava ... Pidichu pona karanathala kootukitu ponanaam ...
Petha manam pulambayil pithu pidichu ponathaam  !!! Kadatha therinja rasavukku kaayam satrum theriyala ... kaalam kadanthu ponalaum kaayam kadanthu poguma ! Innum nenachi paakaiyilae pulambathadi pithu manam...Paavimagalae endi intha avasaram !!! Ini yaaradi athatta ? ini yaaradi thitta?  Yaaradi miratta ?  Yaaradadi vilayada? Ayyo...Thaalatu paadina ennaya oppari paada vechitiyae ena yesa  !! Odivaadi  Thangamae !! Pathumaatha valiyellam  un pinchu mugam paakaiyilae  Paranthodi ponathadi   !!Ee ( flies ) kadika erumbu kadikka pathukittenae  !! Paal nila kaatinene !! Ippadi paal ootha vechitiyae !!! Atha pannuvae itha pannuvae soniyae !!! Veyilakooda thaangamatiyae Chellamae ... Ippadi nerupukku kodukuven unnayaa  !! En kannae !!!
Puriyama naan nikka thodavum mudiyala thottu azhavum mudiyala... Ennachi Ethachi paakaiyilae !! Pannathellam nenachi paaka neramilla !!! Venandi veen vambu ...Thirumbi vaadi raasathi ...Maruthaani sevantha kayila ipo ratham sevanthu  oduthadi  !!! Urumi plan ketkaiyilae  !! Thoppulkodi urava aruthu vittu ponalae paavi maga!!!

-Keerthi Thirunavukkarasu



Comments

Post a Comment

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!