[மீனவர்கள் படும் இன்னல்களை வெறும் செய்தியாய் கண்ட நாம் அதன் பின் அவர் துணைவி மேற்க்கொள்ளும்  துன்பத்தை கருதி எழுதியது இந்த "நெய்தல் கவிதை "ஆகும்..]


Title : நெய்தல்

தாழையின் மணம் எங்கும் பரவ...,
பரந்து விரிந்த உப்பளங்கள் இடையே நிற்கும் நீர்த்தளங்களில் பூத்து நிற்கும் உவர் நீர் மலராய்... கருவாச்சி அவள் காதலின் சாட்சியாய் தலைவன் முடித்த முடிப்போடு குடிசையேறிய குலவிளக்காய் நெய்தல் நிலமடைய !!
குலத்தொழிலை மேற்கொள்ள திமிலேறிய மச்சானை இதழ்முத்தம் கொடுத்து, முத்துக்குளிக்க வழியமிச்ச பரத்திமக !!!

நாள் வாரமாக வாரம் திங்களாக...  பகலில் சென்ற குருகு கூட கூட்டை வந்தடைய...
ஒரு திங்களாகியும் செய்தி வந்தடையல !!
கடற்பயணம் மேற்கொண்ட மச்சான எதிர்பார்த்து கருவாட்டா காயரா கருவாச்சி மக !!!
துணையை பிரிந்த குறுகாய் இரவில் ஓலமிட....
மகரந்தம் இல்லா மலராய் வாடி உடல் மெலிந்து உயிர் துறக்க கருதுவது ஏனோ !!?
வந்தது ஓலையடி... மீட்டது   அவன் படகுமட்டுமடி !!..
நெஞ்சில் குண்டு இட்டு இட்ட பொட்டு அழிந்ததடி !!!
வேலியை தாண்டியதற்கு தாலியே அபராதமாய் !!
வெண்ணிற உடையும் மூடிய கதவும் தண்டனையாய் !!
அவன் நினைவலைகள் கால்களை தொட்டு செல்ல....
போதுமடி இந்த தனிமையும், வெறுமையும்...
கடற்நீரில் உப்பு குன்றிவிட்டதா என்ன???
உன் கண்ணீரால் ஈடுகட்ட நினைக்கிறாய்
!!!
காலம் செய்த தவறுக்கு நீ காயம் கொள்வது சரியா???
சிறு சன்னலோர  கம்பிகளும் ஒற்றை நெற்றி பொட்டும் காட்டாற்றை தடுப்பதா??
என்னடி இது சிறுபுள்ளைத்தனம் !!

 யாரும் இங்கே "கைம்பெண்" அல்ல என் தமிழ் உள்ளவரை !!
எழுந்து வா வண்ணங்களோடு.. வண்ணத்துபூச்சியாக  வரவேற்கிறோம் !!!

நிமிர்ந்து நில் !! குரல்கொடு உன் குலக்குரல் கொடு மேலைநாட்டு ஒற்றுமையின் சின்னம் குனிந்து பார்க்கும் வரை !

-கீர்த்தி திருநாவுக்கரசு
.
.
.
பொருள் அறிக :-
திமில் - கட்டுமரம்
உவர் நீர் - உப்பு நீர்
குருகு- ஒரு வித பறவை
கைம்பெண்- கணவனை இழந்த பெண்ணைக் குறிப்பது

Comments

  1. Fantastic keerthi....much needed for the current scenario,bitter truth

    ReplyDelete
  2. Touches internally... The serials now are making ppl to move a way back where the relationships are still on clutches. Awake for parity...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!