Title : சேற்றுப்பூக்கள்...!!
.
.
மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி 
திருநாவுக்கரசு 


.
.சிலர் புரியும் தவறின் விளைவாய்  குழந்தைகள் படும் இன்னல்களை  குறிப்பதே "சேற்றுப்பூக்கள்"
.
.
.
அந்த கண்கள் யாவும் ஏக்கங்கள் கொண்டு பார்ப்பது ஏனோ? 
ஏன் இந்த இரக்கப்  பார்வை? அய்யோ பாவம் என்று கை நீட்டி வினைவது ஏனோ? 
சிலர் அவமதித்து சலித்துக்கொள்வது ஏனோ? 
நாங்கள் யாதேனும் வேற்றுலகத்தின் பிறப்பா இல்லையில் அரியவகை பொருட்காட்சி பொருளா ? 
பலர் வந்து பார்த்து செல்ல?  சிலர் அழைத்து செல்ல?

அவர்களை அழைத்து செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? 
எங்களை காண வருபவர்கள் யார்? 
புதிதுபுதிதாய் வார்த்தைகள் பேசக்கேட்டோம் "அம்மா, அப்பா " என்றெல்லாம்  அவற்றின் அர்த்தம் யாதென அறியோம் !

சிலர் எங்களை கண்டு புன்முறுவல் புரிவர்... 
மேலும் சிலர் புண்ணியம் என்பார்கள்,  பாவம் என்று கருணை பார்வையும்  கொள்வார்கள்  !! காரணி அறியோம்... 

யாம் அறிந்தது எல்லாம்  குப்பை தொட்டியும்,  தெருக்களின் எண்களே ஆகும்....

நாங்கள் என்ன தங்க தொட்டிலில்களில்  தாலாட்டும் வரமா பெற்று வந்தோம்.... இப்புவியில்... 

இரத்தமும் சதையுமாய் தெரு நாய்களுக்கு வீசி எறியப்பட்ட இரை தானே நாங்கள்  !!

யாம் என்ன காதல் சின்னமா தூக்கி கொஞ்ச.., காமத்தின் துளி தானே சிந்தி விட்டு செல்ல...

நாங்கள் ஒளியிழந்த விண்மீன்கள்,  எங்களின் புன்னகைக்கு நிபந்தனைகள் இல்லை... அரவணைக்க தோள்கள் இல்லை,  செல்ல சண்டைகள் இல்லை,  உரிமையும் இல்லை...

வேண்டாம் என்ற சொல் எங்களின் அகராதியில் இருந்ததே இல்லை... மற்றவரின் கந்தல் எங்களின் ஆடி  மாத கால இலாட்டரிகள்..
பிறரின் எச்சில் மிச்சங்கள் எங்களின் தேவாமிர்த விருந்துகள்...  
தாலாட்டு அறியோம், தாய் மடி அறியோம்,  அதன் வெப்பம் அறியோம்..  
அறிந்தது எல்லாம் சர்ச் மணியின் இசை மட்டும் தான் உணவின் அழைப்பொலியாக...

தினம் ஓர் புது வரவு.. மீட்கப்பட்ட காட்டு ரோஜாக்கள் நாங்கள்... 

நதிகள் கடல் சேரும்,  அலைகள் கரை சேரும்,  கிழக்கே உதிக்கும் சூரியனும் மேற்க்கே முடியும்... 

தொடக்கத்தின் இரகசியம் அறியா எங்களுக்கு முடிவு மட்டும் அறியவா வேண்டும்.. 

தத்தளிக்கும் சிந்தனை  கடலில் துடுப்பில்லா படக்காய் அடையாளம் நோக்கி செல்லும் நாங்கள்... 
வாழும் நாட்களில்  உறவில்லா துன்பத்தில் எதிர் கொள்ளும் உலகத்தில்,  எங்களின் வாழ்க்கை தாமரை இலை தண்ணீர் போல நிலையில்லா தத்தளிப்புதான்...

இது யாதும் உரிமை குரல் அல்ல ! ஓர் உயிரின் வேண்டுகோள் !!
கசக்கி தூக்கி எறிய  வெற்று காகிதம் இல்லை நாங்கள்... 
நீங்கள் செய்த தவறின் பிழை தானே நாங்கள் !!
வீட்டில் வைத்து அழகு பார்க்க ரோஜா மலரா என்ன !! 
"சேற்றுப்பூக்கள் தானே !! "
மெரித்து செல்ல......

-கீர்த்தி திருநாவுக்கரசு

Comments

Post a Comment

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!