Title: தேநீர் விடுதி ( Life of Middle class !!)



இதோ என் காதல் கடிதத்தை இறுதியில் ஏற்று என்னை இருக்கி பற்றி கொண்டாய்..
அதே எட்டாம் மாடி என்ன, இம்முறை ஜன்னல்கள் ஏதும்  இல்லை !!....

ம்ம்ம்ம்... புது  நிதி ஆண்டிற்காண பட்ஜெட் தாக்குதல்... சேமிப்பு திட்டங்கள்,  கடன் தள்ளுபடிகள்,  தங்கத்தின் நிலைகள், இறுதியில் சுற்றுலா திட்டங்களும் அடக்கி...

தேதி பத்திற்க்கே முழு நிலவிலிருந்து அரை நிலவாக மாறிய நிலைமையில் !! தாளம் போடும் EMI கள் இடையே
அமாவாசையை நெருங்கக்கூடாது என்ற பதட்டத்தோடு 9-5 சதுரங்க ஆட்டம்  தொடங்கிய நிலையில்..

அதோ என் iron செய்த சட்டையின் முதல் எதிரி வந்துவிட்டான்...மெட்ரோ !!  அவ்வப்போது முதல் வகுப்பின் வழியே தெரியும் ஒளியில் சரியான ஸ்டேஷனில் இறங்கி வாழ்க்கையின் ஓட்டம் தொடங்கும்... ஆம்..  கருவில் தொடங்கியது அறுபதிலும் ஓயவில்லை!!

பரவாயில்லை !!!


அவ்வப்போது வரும் இடப்பெயர்ப்பு காலத்தை சமாளிக்க... காக்கை கூடுகளை தேடி அலையும் சிறு கூட்டு குருவிகளாய்... கனவில் மட்டும் கோட்டை கட்டும் நடுத்தர வர்கத்தினர்  தான் நாங்கள் !!!

பழகிப்போன பத்துக்கு பத்து வீடு,  கட்டாந்தரை, கடன்கள்.., இரவல் பொருள், கவரிங்  நகைகள்..தவிர.. .நம் நாட்டின் பொருளாதாரம் போல் இருக்கும்  எங்களின் bank balance-கள் இடையே அண்டை நாட்டு ஒற்றர்களை (branded showrooms) ஓரமாய் ஒற்றை கண்களில் பார்ப்பதும்..  மினிமம் balance-லில் தவிப்பதும்...  துணி பாத்து வாங்கும் கூட்டத்தின் இடையே யாரும் அறியா விலை பார்த்து வாங்கும் கூட்டமாய்... டொனேஷன்களுக்கும் Reservation-களுக்கும் இடையே சிக்கி தவிக்கும் நிலையில்லா நாடோடிகள் ... சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் பச்சை கார்டு ஹோல்டர்கள் நாங்கள்....

ஆம் நாங்கள் தான் நடுத்தரவர்கத்தினர் !!!

பொய் ஆடம்பரத்துக்குள் குதித்து முத்திரைகளை எடுத்து பூசி கொள்வோம்...

Weekend movie கள் செல்வோம் விளம்பர இடையில் பாப்கார்ன்களை மறுப்போம்..
Costly restaurant- களுக்கு செல்வோம் menu card-இன் வலபுரத்தை உற்றுபார்ப்போம்.. கிடைக்காத Tnpsc-களுக்கு கோச்சிங் கிளாஸ்கள் செல்வோம்...
levis-சும் Raymond-களும் தேடி தேடி இறுதியில் first copy சென்றடைவோம்...

எங்களுக்கு  தயக்கம் பழக்கம் தான் இனாமாக வரும் கடனும் கடமையும் பழக்கம் தான்...தேதி 10 வரை ஆடம்பரம் பழக்கம் தான் அதன் பின் வரும் வறுமையும் பழக்கம் தான்..

தேனி போல் சுற்றி  திரியும் எங்கள் வாழ்க்கையில் கோடைகாலங்களில் ac show room-களை கடக்கும் அளவுக்குத்தான் எங்கள் ஆடம்பரம்...

நட்சத்திரத்திற்கு ஈடான கனவுகள்...விடி முன் மறைய...எங்களின் சதுரங்க ஆட்டத்திலும் ஒரு காதலுண்டு..
அதை நாங்கள் IG-களிலும் Snap chat களிலும் பதிவுசெய்ததில்லை
என்னையும் என் ஓட்டத்தையும் புரிந்து கொண்ட என் கருவாச்சி!! அழகாய் மெட்ரோ கூட்டத்தின் இடையில் 300ரூவா சீலையில் கலைந்த கூந்தலில் தான் என்னை கட்டி இழுத்தாள் ...

இதோ இந்த முச்சந்தி விநாயகனும், டீ கடையும் தான் எங்கள் சந்திப்பின் சிறு பதிவிடங்கள்...

மீண்டும் உரைக்கிறோம் ஆம்..  நாங்கள் நடுத்தர வர்கத்தினரே !!

தராசின் முள் சற்று தடுமாறுவதும்... சிறு வயதில் விளையாடிய ஊஞ்சல் மேலே கீழே  போய் வருவது சுவாரசியம்தானே  !!!

இரு முரண்பட்ட துருவங்களாய் விளங்கும் சமூகத்தின் இடையே மாத இறுதியில் தத்தளிக்கும் எங்கள் கதைகளை பேசும்... தெருவோர தேநீர் கடைகள் !!!

-கீர்த்தி திருநாவுக்கரசு


[ தேநீர் விடுதி - இது அன்றாட நாம் பார்க்கும் மற்றும்  வாழ்ந்து கொண்டு இருக்கும் middle class  வாழ்க்கையின் ஒரு  சிறிய தொகுப்பாகும்.

* இடப்பெயர்ப்பு காலம்  - வாடகை வீடுகளை தேடி செல்வதை குறிக்கும்

* நிலாவை மாத வருமானதோடு ஒப்பிட பட்டுள்ளது

* முத்திரை - branded பொருட்களை குறிக்கும்]

Comments

Post a Comment

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!