Modern அடிமைகள் !!!

 


அன்றும் இன்றும் மாறாதிருப்பது  ஆதிக்கமும்,அடிமையும்.
சிலர் பணத்திற்கு,சிலர் பசிக்கு;⁣
சிலர் பதவிக்கு,சிலர் படுக்கைக்கு;⁣
சிலர் காதலுக்கு,சிலர் கருவிக்கு.⁣
அன்று வெட்கம் விடுத்து அடிமையானான்:பசிக்கு,⁣
இன்று பசி விடுத்து அடிமையானா ன்:கார்ப்பரேட்களுக்கு,⁣
மீண்டும் ஆனான் அடிமை,இம்முறை பதவிக்கும்,படுக்கைக்கும்!⁣
அன்றைய அடிமைகள் வீட்டின் முற்றம் வரை,⁣
இன்றைய அடிமைகள் வீட்டின் உள்வாசல் வரை,⁣
அன்று ஒருவேளை வயிறுக்காக; இன்று Iphone-க்கும்,EMI-களுக்கும்,credit card-களுக்கும் ஆனான் அடிமையாய்!!⁣

காலங்கள் மாற,கல்வி மாற,⁣
மனிதர்கள் மாற,மாறாதது "களவும் கல்லறையும்" தான்!⁣
Modernisation என்றும் Minimalism என்றும் AI-கை கோர்த்து⁣
கற்பனை விடுத்து,சுயம் விடுத்து, காதலை விடுத்து,⁣
பின் சிரிப்பை,பின் மதிப்பை, அறியாமலே வாழ்க்கையையும் விடுத்து, நடை பிணமாய் நடமாடும் உலகமா கேட்டோம்?⁣
பறக்கும் கார்களும்,⁣
பணிபுரியும் Robot-களுமா கேட்டோம்? இல்லை.⁣

நாங்கள் நாங்களாய் வாழ,பழக  நன் மனிதர்களும்,சிரிக்க நண்பர்களும், பசிக்கு உணவும்,படுத்தால் உறக்கமும் தான்.⁣
கார் வைத்து இருப்பவனும், காரியவாதியும்தான் இன்றைய Elite group-களின் முதல் கட்ட பணி தேனிக்கூட்டங்கள்.⁣
இப்படித்தான் வாழனும் இதுதான் வாழ்க்கை என்று அவன் வரைந்த பாதைக்கு (BluePrint) பகடைகளாய் இயந்திர வாழ்க்கை வாழும் மாத சம்பளம் வாங்கும்⁣
"Modern அடிமைகள்"!!!!

-கீர்த்தி திருநாவுக்கரசு

Comments

Popular posts from this blog

Beyond time and space

தெருவிளக்கு!!!

Innocence!