Title : தரமணி
உன் இரவின் அழகும் ! அந்த அமைதியும் தான் என்னை கவர்ந்தது !!!
ஒரு வருடம் ஆகியது உன்னை சந்தித்து அன்று போல் இன்றும் மாறா இளமையும்... சொகுசு கார்களும்.. கெஸ்ட் ஹௌஸ்களும் (Guest house)...பைவ் ஸ்டார்(Five star) வாழ்க்கையும் பணக்கார நண்பர்களும்... IT நிறுவனங்களும் அடேடே .. ம்ம்ம்ம் பலமுறை உன்னை கண்டும் உன் வாழ்கை கண்டும் பொறாமை அடைந்துள்ளேன்....
உனது வளர்ச்சி என்னை வியக்கவும் வைத்தது... பயப்படவும் வைத்தது... எனினும் காதலில் நீ நீங்கா இடம் கொண்டுள்ளாய்... பகட்டு வாழ்க்கையில் மூழ்கிவிட்ட உன்னை இன்றும் அழகாய் காண்பிப்பது இந்த காதல் தான் !!
நினைவுள்ளதா காதலியே !! உன்னை வந்தடைய நான் பட்ட இன்னல்கள்.... சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இஸ்திரி போட்ட டிப் டாப் உடையும் படிய வாரிய தலைமயிரும் பசியும் பாராமல்.... தினம் ஒரு காதல் கடிதம் எழுதி எழுதி தேய்ந்தது கைகள் மட்டுமா ! அயராது நடந்ததால் என் கால் செருப்பும் தான் !!எனினும் இரவில் நம் கால்களை தீண்டிய அலைகளும்... தாகத்தை தீர்த்த மோர் தாத்தாவும் மறக்க முடியுமா !
... இறுதியில் சிக்கிக்கொண்டேன் உன்னிடம்...
பகல் காணா வாழ்க்கை.. Ac கார்கள் Saturday பார்ட்டிகள்..Western Culture என்று சொல்லப்படும் அயல்நாட்டு மெருகு !! நான் கனவில் காணாத வாழ்கை இது !! எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம்... பேசும் பேச்சும் உண்ணும் உணவும் கூட.... சிறுபான்மை உணர்வு என்னை கொல்ல...என் தாய் மொழி எங்கே என தேடி சென்ற காலம் பல ... யாரடா கூறியது "வெள்ளையனே வெளியேறு"என்று.... வந்தானடா BPO ஆகவும் IT ஆகவும்.... Tidel park உம் Elcot sez உம் வறுமையின் diary ஆக...
AI புது தோழியாக ... Excel களும் MS உம் நண்பர்களாய்.. PPT கள் தூரத்து சொந்தமாய்... Target களும்... Incentives உம் மகிழ்ச்சியாய்... Error களும் Extension உம் சோகமாய்... Break out கள் தேனீர் கடையாய்....யாருமறியா மறைந்து வாழும் சமூகம் போல் பகல் காணா பறவைகளாய்...(Bats-வௌவால் ) கண்ணாடி பேழைக்குள் சிக்கிக்கொண்ட பட்டாம்பூச்சியாய் cntrl -C யிலும் cntrl V -யிலும் முடிந்து விடுமோ இந்த வாழ்க்கை என்று...
எட்டாம் மாடி ஜன்னல் வழியே ஏக்கத்துடன் உன்னை காணும் நான் !!!
என் காதலே என் அழகியே OMR ஏஹ் !!!
-கீர்த்தி திருநாவுக்கரசு
குறிப்பு : இதில் காதல் கடிதம் என்று குறிப்பது Resume..
வேலை தேடி அலையும் இளைஞர்கள் எவ்வாறு BPO என்று அழைக்கப்படும் corporate களில் சேர்ந்து அதன் மூலம் வரும் அனுபவத்தை கூறுவதே இந்த எழுத்தின் நோக்கம்... இது என் தனி கருத்தே ஆகும்... இத்துறையை குறை கூறுவது நோக்கம் அல்ல !! படித்து பகிருங்கள் !!

Nice..
ReplyDeleteTq soo much👍😊
DeleteNice dr
ReplyDelete❣️😊
Delete:)
ReplyDelete❤👌🏽
ReplyDeleteSuper
ReplyDeleteSuper d
ReplyDelete